பேரணி சென்ற த.வெ.க.,வினர் மீது வழக்கு
சென்னை: த.வெ.க., கட்சியில், மத்திய சென்னை மாவட்ட செயலராக குமார் மற்றும் அவருடன் சில நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட செயலரை வரவேற்கும் விதமாக, நேற்று முன்தினம் இரவு, அனுமதியின்றி, ஐ.சி.எப்.,பில் இருந்து, வில்லிவாக்கம் வரை பேரணி நடத்தினர். இதையறிந்த வில்லிவாக்கம் போலீசார், அவர்களை தடுத்தும், அதையும் மீறி பேரணியாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது.இதனால், அனுமதியின்றி பேரணி நடத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய, த.வெ.க., கட்சியை சேர்ந்த குமார், ஜவஹர், விசு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.