உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது

லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது

சென்னை:கன்டெய்னர் லாரி டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த, இரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.எண்ணூர் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ், 40; லாரி டிரைவர். இவர் மணலி புதுநகரிலிருந்து, கன்டெய்னர் ஏற்றிக் கொண்டு, துறைமுகம் நோக்கிச் சென்றார். திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் சென்ற போது, மர்ம நபர்கள் கத்திமுனையில், அமல்ராஜை மிரட்டி, அவரிடமிருந்து 400 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர்.இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிந்து, தாங்கல் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக், 22, ஆசிர்கான், 22, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் கல்லூரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ