மேலும் செய்திகள்
விதிமுறை மீறிய கட்டடங்கள் பல்லடத்தில் அதிகரிப்பு
27-Mar-2025
சென்னை, சென்னை பெருநகரில், கடந்த ஓராண்டில், 55 விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளித்து, 25 கட்டடங்களுக்கு், 'சீல்' வைக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெருநகரில், விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை; உயர் நீதிமன்றம், முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக உத்தரவு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை விபரங்களை, இணையதளத்திலும் சரியாக வெளியிடப்படுவதில்லை. இதனால், வீடு வாங்குவோர், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விபரங்களை அறிய முடிவதில்லை.இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2024ம் ஆண்டில், விதிமீறல் புகார்கள் அடிப்படையில், 55 கட்டடங்களுக்கு அமலாக்கப்பிரிவு வாயிலாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில், 25 விதிமீறல் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன. விதிமீறல் புகார்கள் உறுதியான நிலையில், ஆறு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கான பிரிவில் காணப்படும் அலுவலர் பற்றாக்குறையை சரி செய்யும்படி, மேலதிகாரிகளிடம் கோரி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். துாங்கி வழியும் இணையதளம்அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் விபரங்கள் இப்படி இருந்தாலும், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இந்த விபரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. கடந்த, 2024ல், 14 வீதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, எட்டு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ***
27-Mar-2025