உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாணயங்களை வழிப்பறி செய்தோர் கைது

நாணயங்களை வழிப்பறி செய்தோர் கைது

கோட்டை, சென்னை, பொன்னியம்மன்மேடு, நடேசன் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 70; பாரிமுனை, ரிசர்வ் வங்கி அருகில், கிழிந்த ரூபாய் நோட்டுகளை 'கமிஷன்' அடிப்படையில் மாற்றிக் கொடுத்து வருகிறார்.கடந்த 25ம் தேதி, ரிசர்வ் வங்கியில் இருந்து, 40,000 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை மாற்றிக் கொண்டு, வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்க, ரிசர்வ் வங்கி பிரதான நுழைவாயில் எதிரில் காத்திருந்தார்.அப்போது, ஆட்டோவில் வந்த இருவர், பாபு கையில் வைத்திருந்த 40,000 ரூபாய் நாணயங்கள் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு, ஆட்டோவில் தப்பினர். இதுகுறித்த புகாரின்படி, கோட்டை போலீசார் விசாரித்தனர்.இதில் எண்ணுார், சிவகாமி நகரைச் சேர்ந்த சண்முகம், 30, எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகரைச் சேர்ந்த குணவழகன், 29, ஆகியோர் திருடியது தெரிந்தது.இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 40,000 மதிப்புள்ள நாணயங்கள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை