உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் மொபைல் பறித்த கல்லுாரி மாணவர்கள் கைது

பெண்ணிடம் மொபைல் பறித்த கல்லுாரி மாணவர்கள் கைது

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், திருமலை நகரைச் சேர்ந்தவர் வித்யா செரியன், 23; தனியார் நிறுவன ஊழியர்.கடந்த செப்., 25ம் தேதி பணி முடிந்து, வில்லிவாக்கம், படேல் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வித்யா செரியன் பையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். வில்லிவாக்கம்போலீசில் புகார் அளித்திருந்தார்.போலீசார், 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் டவரை ஆய்வு செய்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வசந்த், 20, தங்கபாண்டியன், 21, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இருவரும் தனியார் கல்லுாரியில் படிப்பதும்,திருடிய மொபைல் போனை விற்று செலவு செய்ததும் தெரிந்தது. இருசக்கர வாகனத்தைபறிமுதல் செய்த போலீசார், அவர்களை நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ