மேலும் செய்திகள்
மாநில வாலிபால்: 88 அணிகள் பலப்பரீட்சை
13-Oct-2025
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கும் பள்ளி மாணவ - மாணவியருக்கான வாலிபால் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., விடுதி அணிகள் வெற்றி பெற்று வருகின்றன. எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி இணைந்து, சேர்மன் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல் கலையில் நடத்துகின்றன. இருபாலருக்குமான வாலிபால், கூடைப்பந்து ஆகிய போட்டிகளில், மாநிலத்தில் முன்னிலையில் உள்ள தலா எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கின்றன. லீக் போட்டியில் தேர்வாகும் அணிகள், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. நேற்று நடந்த லீக் போட்டிகள் விபரம்: வாலிபால் மாணவரில் திருச்சி எஸ்.டி.ஏ.டி., விடுதி அணி, 25 - 13, 25 - 10, 25 - 17 என்ற கணக்கில் செயின்ட் மேரிஸ் அணியையும், திருவாரூர் எஸ்.டி.ஏ.டி., விடுதி அணி, 25 - 16, 25 - 19, 25 - 17 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணியையும் வீழ்த்தின மாணவியரில் செயின்ட் மேரிஸ் அணி, 25 - 7, 25 - 9 என்ற கணக்கில் பெரம்பூர் அரசு பள்ளியையும், செயின்ட் ஆன்ஸ் பள்ளி, 25 - 15, 25 - 21 என்ற கணக்கில் ஓசூர் யோகி வேமனா பள்ளியையும் தோற்கடித்தன கூடைப்பந்து மாணவரில் திருவாரூர் கமலா சுப்ரமணியன் பள்ளி, 66 - 57 என்ற கணக்கில், மதுரை கல்வி சர்வதேச பள்ளியையும், ஆலப்பாக்கம் வேலம்மாள் அணி, 45 - 39 என்ற கணக்கில், சேலம் செயின்ட் மேரிஸ் அணியையும் வீழ்த்தின மாணவியரில் சென்னை வித்யோதயா, 43 - 25 கணக்கில் திருவண்ணாமலை வி.டி.எஸ்., ஜெயின் அணியையும், தஞ்சை செயின்ட் ஜோசப் அணி, 59 - 56 என்ற கணக்கில், சேலம் செயின்ட் ஜோசப் அணியையும் வீழ்த்தின.
13-Oct-2025