உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்

அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்

சென்னை, வகத்தீட்ரல் சாலையில், 100 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கத்தீட்ரல் சாலையில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி அருகே ஏற்கனவே சிக்னல் உள்ளது. தற்போது செம்மொழி பூங்கா - நுாற்றாண்டு பூங்கா அருகே, சாலையை பாதசாரிகள் கடப்பதற்காக மற்றொரு சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.அதாவது, 100 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.எனவே, பூங்கா அருகே உள்ள சிக்னல்களை அகற்றிவிட்டு, பாத சாரிகள் வசதிக்காக, அவ்விடத்தில் நகரும் படிக்கட்டு, மின்துாக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ