உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.54.11 கோடியில் வாரிய குடியிருப்பு கட்டுமானம் துவக்கம்

 ரூ.54.11 கோடியில் வாரிய குடியிருப்பு கட்டுமானம் துவக்கம்

பாரிமுனை: வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 54.11 கோடியில் 269 வீடுகள் கட்டும் பணி நேற்று துவக்கப்பட்டது. துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட, கிளை பேக்டரி கார்ப்பரேஷன் லேனில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1995ம் ஆண்டில் 6 பிளாக்குகளில், 234 வீடுகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் பாழடைந்ததால் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மறுகட்டுமான திட்டத்தின் கீழ், 54.11 கோடி ரூபாய் செலவில், 9 தளங்களுடன், 411 சதுர அடியிலான 269 புதிய வீடுகள், மின் துாக்கி, தார்ச் சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான, பணியை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். இவ்விழாவில், மேயர் பிரியா, தயாநிதி, எம்.பி., மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா, துணை கமிஷனர் ரவி கட்டா தேஜா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி