உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்

பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்

சென்னை ' சென்னை மயிலாப்பூர், கபாலித்தோட்டம் பகுதியில் ஸ்ரீமத் பால சன்னியாசி மடம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலர் ஆறுமுகம், 50, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் பால சன்னியாசி மடத்தின் வன்னியர் திருமண மண்டபம் உள்ளது. கடந்த 30ம் தேதி, மண்டபத்தை அபகரிக்கும் நோக்கில், ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. அங்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வைத்திருந்த சொத்து ஆவணங்களை எடுத்து சென்றனர். அங்கு இருந்த வாதாபி விநாயகர் சிலையையும் சேதப்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். ஆனால், திருமண மண்டபத்தில் ஆவணங்களை எடுத்து சென்றவர்களும் ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளனர். அதன் படி, வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:வன்னியர் சொத்து வாரியத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, ரவுடிகளுடன் வந்து திருமண மண்டபத்துக்குள் புகுந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக எங்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை