உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவு குவியும் வீராங்கல் ஓடையை துார்வார உள்ளதாக மாநகராட்சி தகவல்

கழிவு குவியும் வீராங்கல் ஓடையை துார்வார உள்ளதாக மாநகராட்சி தகவல்

சென்னை, வேளச்சேரி, பாலாஜி நகர் அருகே, தடுப்புச்சுவர் இல்லாத வீராங்கல் ஓடையில் குப்பை கழிவு கொட்டப்படுகிறது.இதனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாயை பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அதன்படி, சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கை:வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், நீர்வளத் துறையிடம் இருந்து, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்பின், அவற்றை துார்வாரி பராமரிக்கும் பணிகளை, மாநகராட்சி துவங்கியுள்ளது.மழைக்காலத்தில் தடையின்றி இந்த கால்வாய்களில் தண்ணீர் செல்லவும், வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் தடுக்கவும், துார்வாருவதற்கான திட்ட அறிக்கையை, நீரியல் ஆலோசர் சக்திவேல் தயாரித்து வருகிறார்.அவர் அறிக்கையை அளித்ததும், வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை