உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை

டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை

சென்னை, டி.ஐ.ஜி.,யின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், பொய்யான தகவலை கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தொடர்பாக கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைமில் டி.ஐ.ஜி., விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு, கடந்த 19ம் தேதி, குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், என்னுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பார்சலை ஆமதாபாத்தில் இருந்து இலங்கைக்கு 'இன்டர்நேஷனல்' என்ற கொரியரில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 'இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என்றும், அந்த மர்ம நபர் கூறினார். பொய்யான தகவல் என்பதால் அழைப்பை துண்டித்துவிட்டேன். எனவே, என்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார். புகாரின்படி, மர்மநபர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை