உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்

 கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்

சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா, கொட்டும் மழையிலும் விமரிசையாக நடந்தது. சென்னை, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தி தீபமேற்றப்பட்டது. நேற்று மாலை அனைத்து வீடுகளிலும், அகல் விளக்கு ஏற்றி, அவல், பொரி, கடலை உருண்டை, அப்பம் செய்து படைத்து வழிபாடு நடத்தினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரஹாரப் பகுதி யில் நேற்று விளக்கேற்றப் பட்டது. இன்று சொக்கப் பனை கொளுத்தி, தீப மேற்றி வழிபாடு நடக்கிறது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும் இன்று கார்த்திகை தீப விளக்கேற்றி சொக்கப் பனை கொளுத்தப் படுகிறது. வடபழனி முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருநாளான நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மாலை விசேஷ சந்தனகாப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து கார்த்திகை பூஜை நடந்தது. மேலும், 27 நட்சத்திரங்கள், நான்கு கோபுரங்கள், எட்டு சன்னதிகள் என கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். -- நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ