குன்றத்துார் - பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
குன்றத்துார்குன்றத்துாரை மையப்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், சென்னை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலை குறுகலாக இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்புகளாலும், எந்நேரமும் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், இச்சாலை விரிவாக்கம் தொடர்பாக, அமைச்சர்கள் வேலு, அன்பரசன் தலைமையில், கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதைத்தொடர்ந்து, குன்றத்துார் அடுத்த கரைமா நகரில், சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடு, கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி, இரண்டு நாட்களாக வருகின்றன.இரண்டாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ள பொருட்களை பொதுமக்களே அகற்றிய நிலையில், 'பொக்லைன்' இயந்திரத்தை கொண்டு இடிக்கப்படுகின்றன.இரண்டு நாட்களாக, 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டதால், அப்பகுதியில் கட்டட இடிபாடுகள், குவியல் குவியலாக தேங்கி கிடக்கின்றன.