உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாய்பாபாவின் உடை தரிசித்த பக்தர்கள்

சாய்பாபாவின் உடை தரிசித்த பக்தர்கள்

புதுவண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில், வட சென்னை ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த நிலையில், ஷீரடி சாய்பாபா உடுத்திய 140 ஆண்டு பழமையான கப்னி புனித உடை, மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் இருந்து கொண்டு வரப்பட்டு, வட சென்னை ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ