| ADDED : மார் 14, 2024 12:31 AM
மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பெரியார் நகர் அடுத்த லட்சுமி நகரில் எட்டு தெருக்களில் 1,000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இத்தெருக்களில் 20 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கப்படவில்லை.பகுதிவாசி சுரேஷ்ராஜ், 38, கூறியதாவது:மடிப்பாக்கத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக, லட்சுமி நகர் உள்ளது. இங்கு 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்கள், மேடு பள்ளங்களாக காணப்படும் வழித்தடத்திலேயே பயணிக்கிறோம்.தவிர, துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பை சேகரிப்பதில்லை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கான எவ்வித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. இப்பகுதி வார்டு கவுன்சிலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மாநகராட்சி அதிகாரிகள், உரிய கவனம் செலுத்தி, லட்சுமி நகர் சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.