டாஸ்மாக்கில் தகராறு 30 ஆண்டு நட்பு பிரிந்தது
வேளச்சேரி :கண்ணகி நகர் சேர்ந்தவர் கபாலி, 46; ஆட்டோ ஓட்டுநர். பெருங்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம், 45; வேன் ஓட்டுநர்.இருவரும், 30 ஆண்டு கால நண்பர்கள். அடிக்கடி இருவரும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, தரமணியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கபாலி, ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து, ஆறுமுகம் கையில் வெட்டினார். பதிலுக்கு, அதே கத்தியை பறித்த ஆறுமுகம், கபாலி கையில் வெட்டினார்.கையில் பலத்த காயம் அடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வேளச்சேரி போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.