உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய நாய்கள்

நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய நாய்கள்

அம்பத்துார்: நடந்து சென்ற பெண்ணை சுற்றி வளைத்த நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அம்பத்துாரில் நடந்துள்ளது. அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் விந்தியா, 31. தனியார் நிறுவன ஊழியர். இவர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டிற்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்திற்கும் மேற்பட்ட நாய்கள், விந்தியாவை சூழ்ந்து குரைத்துள்ளன. அதில் இரு நாய்கள், விந்தியாவின் கால் மற்றும் தொடை பகுதியில் கடித்துள்ளது. அங்கிருந்தவர்கள், நாய்களை துரத்தி விந்தியாவை மீட்டுள்ளனர். பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்றுள்ளார். அப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதாகவும், நடந்து செல்வோரை அவை விரட்டி விரட்டி கடிப்பதால், அவற்றை அம்பத்துார் மண்டல அதிகாரிகள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ