மெரினாவில் 6 நாட்கள் ட்ரோன் பறக்க தடை
சென்னை, இந்திய விமானப்படையின் 'ஏர் ஷோ' நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் வரும், 6ம் தேதி நடக்க உள்ளது.இதில் தமிழக கவர்னர், முதல்வர், விமானப்படை தலைவர், தலைமைச் செயலர் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். 'ஏர் ஷோ'வை முன்னிட்டு, இன்று முதல், 5ம் தேதி வரை ஒத்திகை நடக்க உள்ளது.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினா கடற்கரை பகுதியில் இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் ட்ரோன், ஆளில்லா விமானம், ரிமோட் வாயிலாக பறக்ககூடிய எந்த கருவிகளும் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதோபோல், சென்னை விமான நிலைய எல்லையிலும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.