உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு அடித்தளம் கட்டுமானம் இறுதிக்கட்டம்

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு அடித்தளம் கட்டுமானம் இறுதிக்கட்டம்

சென்னை,எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தில், கட்டடங்கள் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வேயில் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தை, பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணியர் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, 734.91 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகளை, ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இதையடுத்து, ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மறுசீரமைப்பு பணி துவங்கியது. முதற்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பின், அடித்தளம் அமைக்கும் பணி துவங்கியது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி இர்வின் மற்றும் பூந்தமல்லி பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.பூமிக்கு அடியில் பல அடி ஆழத்தில் கம்பிகள் பதித்து அடித்தளம் போடப்பட்டுள்ளது. காந்தி இர்வின் சாலை ஒட்டி, முன்பு ரயில்வே குடியிருப்பு இருந்த பகுதியில், எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்திற்கான அடித்தளப் பணிகள் நடக்கின்றன.பல இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. காந்தி இர்வின் சாலை ஒட்டி, எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது.இதுதவிர, பூந்தமல்லி சாலையை ஒட்டி, எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையமும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய கட்டடம் கட்டிய பின், பழைய கட்டடத்தில் இருந்து பொருட்கள் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RADE
ஜன 20, 2024 19:51

பல முனைகள் வைத்து மக்கள் உள்ளும் வெளியேயும் வரும் படி அமைக்கும், அனைவரும் உள்ளேயும் பல வழிகளில் பிரிந்து சென்று பயணிக்க படி அமைக்கும். கூட்ட நெரிசல் இருக்க கூடாது


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ