உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஒரே புடவையில் துாக்கிட்டு உயிரை மாய்த்த முதிய தம்பதி வறுமையின் கொடுமையால் விபரீதம்

 ஒரே புடவையில் துாக்கிட்டு உயிரை மாய்த்த முதிய தம்பதி வறுமையின் கொடுமையால் விபரீதம்

சென்னை: வறுமையின் கொடுமையால், ஒரே புடவையில் முதிய தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது. சேப்பாக்கம், ஆடம்ஸ் சாலை லாக் நகரைச் சேர்ந்தவர் பின்னி மனோகரன், 70; இவர், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது முதல் மனைவி, 27 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு பிறந்த மகனும், மகளும் திருமணமாகி வேளச்சேரியில் வசித்து வருகின்றனர். முதல் மனைவி இறந்த பின், மதுரையை பூர்வீகமாக கொண்ட ஆதரவற்ற செல்வி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்த பின்னி மனோகரன், சேப்பாக்கம் லாக் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை ஒரே புடவையில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் போதுமான வருவாய் இல்லாமல் தவித்த முதிய தம்பதி, வறுமை காரணமாக தினசரி அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி உள்ளனர். ஒருகட்டத்தில் விரக்தி அடைந்தவர்கள், 'இனி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது' என, தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி