உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தொட்டியில் கிடைத்த ரூ.25,000 ஒப்படைத்த ஊழியர்கள்

குப்பை தொட்டியில் கிடைத்த ரூ.25,000 ஒப்படைத்த ஊழியர்கள்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, பூ வியாபாரம் செய்து வருபவர் அஸ்வினி. நேற்று காலை, 11:00 மணியளவில் பூ விற்பனை செய்த, 25,000 ரூபாய் வைத்திருந்த பையை, தவற விட்டுள்ளார். இதுகுறித்து, அப்பகுதியில் துாய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த, உர்பேசர் சுமித் நிறுவன பணியாளர்களான நீலாவதி, தேவி ஆகிய இருவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, உயரதிகாரியின் அனுமதியிடன் குப்பை தொட்டியை கவிழ்த்து சோதனை செய்ததில், பணம் இருந்த பை கிடைத்தது. அந்த பணத்தை, பூ வியாபாரியிடம் அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் ஒப்படைத்தனர். தவறவிட்ட பணத்தை மீட்டுக் கொடுத்த துாய்மை பணியாளர்களுக்கு, பூ வியாபாரி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை