உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீன்பிடி துறைமுகத்தில் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

 மீன்பிடி துறைமுகத்தில் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

காசிமேடு: 'டிட்வா' புயலால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், டன் கணக்கில் குவிந்த குப்பை அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'புட்வா' புயல் காரணமாக, கடந்த வாரம் சென்னையில் ஐந்து நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் பழைய மீன்பிடி வார்ப்பு தளத்தில், குப்பை, பிளாஸ்டிக், தெர்மகோல், மரக்கழிவுகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு, டன் கணக்கில் குவிந்துள்ளன. ஒரு வாரமாகியும் அவை அகற்றப்படாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகளை, மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை