மேலும் செய்திகள்
விம்கோ நகர் மெட்ரோவில் கடைகள் அமைக்க அழைப்பு
2 minutes ago
கிண்டி ரேஸ்கோர்ஸ் குளங்கள் நிரம்பின
2 minutes ago
மீன்பிடிக்க சென்ற படகுகள் பறிமுதல்
3 minutes ago
சென்னை: செல்லப்பிராணிகள் உரிமம் பெற, வரும் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் தெருநாய்கள் மற்றும் நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணி நடைபெற்று வருகின்றன. மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். இதற்கான பணிகள், மாநகராட்சி செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில், அக்., 8ம் தேதி முதல் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை, 91,711 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப் பட்டுள்ளன. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழை காரணமாக, டிச., 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago