உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எர்ணாவூர் மேம்பாலத்தில் தீ விபத்து

எர்ணாவூர் மேம்பாலத்தில் தீ விபத்து

எண்ணுார், திருவொற்றியூர் அருகே, எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும், சுவரில் படர்ந்து இருந்த செடி, கொடிகள் காய்ந்து, சருகுகளாகி விட்டனஇந்நிலையில், நேற்று காலை தண்டவாளமருகே, பாலாஜி நகர் போகும் வழியில், மேம்பால பக்கவாட்டில், காய்ந்து கிடந்த சருகுகளில், திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த எண்ணுார் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீ அணைத்தனர்.அதிர்ஷ்டவசமாக, அருகேயிருந்த ரயில்வே சிக்னலில் தீ பிடிக்கவில்லை. சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை