உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் - டாடா நகருக்கு முதல் பார்சல் ரயில் இயக்கம்

தாம்பரம் - டாடா நகருக்கு முதல் பார்சல் ரயில் இயக்கம்

சென்னை, தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு, முதல் தனியார் பார்சல் ரயில், நேற்று புறப்பட்டு சென்றது. 440 டன் டயர்கள், 30 பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டன.ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, வருவாயை பெருக்க பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, விளம்பரங்கள் செய்வது, நடுத்தர ரயில் நிலையங்களில் பார்சல் மையங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகருக்கு செல்லும் முதல் தனியார் பார்சல் ரயில், நேற்று புறப்பட்டு சென்றது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:மாநிலங்களுக்கு இடையே, சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில், தனியார் பங்களிப்போடு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், முதல் முறையாக தாம்பரத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகருக்கு, 30 பெட்டிகள் உடைய பார்சல் ரயிலில், 440 டன் டயர்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.ஒரு முறை மேற்கொள்ளும் 1,624 கி.மீ., துாரம் பயணம் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 18.5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இதேபோல், தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து வாகன உதிரிபாகங்கள், ஆடைகள், தோல் பொருட்கள், கூரியர் பொருட்கள் போன்றவை சரக்கு ரயில்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது.இதனால் ரயில்வேக்கு வருவாய் கிடைப்பதோடு, சிறு, குறு தொழில் வளர்ச்சி ஏற்பட வழி வகுக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை