உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீன்பிடிக்க சென்ற படகுகள் பறிமுதல்

 மீன்பிடிக்க சென்ற படகுகள் பறிமுதல்

காசிமேடு: கடலில் மீன்பிடிக்க சென்றோரின், ஆறு படகுகள் பறிமுதல் செய்யப்பட் டன. 'டிட்வா' புயல் எச்சரிக்கை காரணமாக, 'மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லக்கூடா து' என மீன்வளத் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், 'மீன் பிடிக்க சென்றுள்ள விசைப்படகுகள் அருகில் உ ள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பிட வேண்டும்; மறு அறிவிப்பு வரும் வரை, மீனவர்கள் மீன்பிடிக்க செல் ல வேண்டாம். மீறி கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், உரிய நடவடிக்கை மே ற்கொள்ளப்படும்' என, காசிமேடு மீன்பிடி துறைமு க மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் திருநாகேஷ்வரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், விதிமீறி காசி மேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற ஆறு விசைப்படகுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட ன. ''துறைரீதியாக வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என திருநாகேஷ்வரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ