உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு சிறுவன் உட்பட ஐவருக்கு காப்பு

பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு சிறுவன் உட்பட ஐவருக்கு காப்பு

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 36 வயது பெண். ஏப்., 3 இரவில், தன் வீட்டிற்கு வந்த அறிமுகமான ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, பெண்ணை அவதுாறாக பேசி மிரட்டியுள்ளனர்.மேலும், அவரிடமிருந்து, 5,000 ரூபாய் பணத்தை, ஆன்லைன் பணி பரிவர்த்தணை செயலியான 'ஜிபே' வழியாக பறித்துள்ளனர். அப்பெண் அளித்த புகாரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இருபிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணம் பறிப்பில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன், 24, நவீன்குமார், 27, ஜனவா, 34, அகிலா தேவி, 44 மற்றும் 17 வயது சிறுவன் என, ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். இதில், நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ