உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போதை மாத்திரை விற்ற நான்கு பேர் கைது

 போதை மாத்திரை விற்ற நான்கு பேர் கைது

தரமணி: தரமணி 200 அடி சாலையில், ஒரு நடை மேம்பாலம் உள்ளது. பயன்பாடு இல்லாத இந்த நடை மேம்பாலத்தில், இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை, மது அருந்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்ட தரமணி போலீசார், நடை மேம்பாலத்தில் நின்ற நான்கு பேரிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில், தரமணியை சேர்ந்த லோகேஷ், 24, விக்கி, 27, லோகநாதன், 19, நித்யானந்தம், 19, என தெரிந்தது. இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்து, இந்த நடை மேம்பாலத்தில் வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 20 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !