உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச கண்புரை பரிசோதனை முகாம்

இலவச கண்புரை பரிசோதனை முகாம்

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, நற்பவி டி.எஸ்., ராமானுஜம் - மதுராபாய் கேட்கர் அறக்கட்டளை மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண்புரை பரிசோதனை முகாமை, நேற்று நடத்தின.கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மறுநாளே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அறுவை சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கான தங்கும் வசதி, மருந்து, பேருந்து வசதி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.மதியம் வரை நடந்த முகாமில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியை அறக்கட்டளை தலைவர் ஹரி ஈஸ்வரன், டிரஸ்டி சவுமியா ஈஸ்வரன், சீதா சங்கரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி