மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்
23-Jul-2025
சேத்துப்பட்டு,பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணியரின் மொபைல் போன்களை திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலைக்கு போன்களை வாங்கும் கடைக்காரரும் சிக்கினார். உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்சரண், 25. புழல், காவாங்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சேத்துப்பட்டு, எஸ்.எம்., சாலையில், கடந்த 6ம் தேதி நண்பருடன் நடந்து சென்றார். அப்போது, அவர்களை வழிமறித்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், 600 ரூபாயை பறித்து தப்பினர். சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, 26, ராயபுரம் 'பூச்சி' வினோத், கொருக்குபேட்டை கார்த்திக், 27, ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில் மூவரும், மாநகர பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணியரின் மொபைல் போன்களை திருடும் கும்பல் என்பது தெரிந்தது. இவர்கள் திருடிய மொபைல் போன்களை, பாரிமுனையில் கடை நடத்தும் முபாரக் என்பவரிடம் விற்று பணம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து, கடைகாரர் முபாரக், 22, என்பவரையும் போலீசார் கைது செய்து, ராம்சரணின் மொபைல் உட்பட 11 போன்களை பறிமுதல் செய்து, நால்வரையும் சிறையில் அடைத்தனர்.
23-Jul-2025