மேலும் செய்திகள்
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
1 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
1 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
1 hour(s) ago
தேசிய பல்கலை வாலிபால்: எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
1 hour(s) ago
திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே நாவலுாரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், பல்வேறு கடைகள் உள்ளன. இதில், வாகன நிறுத்தம் அருகே, சிறிய அளவில் டீ மற்றும் ஜூஸ் கடை உள்ளது.வழக்கம்போல், நேற்று காலை 6:00 மணிக்கு கடை திறந்து, மூன்று பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் நான்கு 'காஸ்' சிலிண்டர் இருந்துள்ளன. காலை 7:30 மணிக்கு, ஒரு காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடிக்க துவங்கியது. இதை அறிந்த மூன்று பணியாளர்களும், கடையிலிருந்து வெளியேறினர்.பின், அடுத்தடுத்து இரண்டு சிலிண்டர்கள் வெடித்து, தீயானது மள மளவென பரவி புகைமூட்டமாக மாறியது. தகவல் அறிந்து வந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago