உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கீதம் உணவக கிளை போரூரில் திறப்பு

கீதம் உணவக கிளை போரூரில் திறப்பு

சென்னை, பலவேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற 'கீதம்' உணவகங்கள், சென்னையின் பல இடங்களில் உள்ளன. தற்போது, போரூர் ஏரிக்கு அருகே, புதிய கிளையை கீதம் துவங்கியுள்ளது.நடிகை நளினி, சென்னை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ராமதாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று, உணவகத்தை திறந்து வைத்தனர்.கீதம் நிறுவனர் முரளி கூறியதாவது:'நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது' என்பதை, நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அதற்கு ஏற்ப, தொழில், குடியிருப்புகளில் வளர்ச்சியடைந்து வரும் போரூரில், எங்களின் 14வது கிளையை துவங்கியுள்ளோம்.ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையில், இந்த உணவகம் அமைந்துள்ளது.தினம் காலை 6:00 மணி முதல் இரவு 2:00 மணி வரை, உணவகம் இயங்கும். 600க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன.நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, இரவு நேர சிற்றுண்டிக்காக பொதுமக்கள் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை