உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

எண்ணுார், ஆந்திர மாநிலம், ஒங்கோலைச் சேர்ந்த தேவராஜ் - ஜோதி தம்பதி, சென்னையில், எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரையோரம் குடிசை அமைத்து வசிக்கின்றனர். தலை முடி வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றனர்.தம்பதியின், ஒன்றரை வயது ஆண் குழந்தை ஜெயசந்துவிற்கு, நேற்று காலை, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினர்.மூன்று நாட்களாக, காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, இறப்பிற்கான காரணம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி