உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியருக்கு தொல்லை தருவதை தடுக்க கைதானோரிடம் நன்னடத்தை உத்தரவாதம்

சிறுமியருக்கு தொல்லை தருவதை தடுக்க கைதானோரிடம் நன்னடத்தை உத்தரவாதம்

சென்னை, வன்கொடுமை வழக்கில் சிக்கிய, 31 - 44 வயது உடைய நபர்களால், சிறுமியருக்கு எந்த தொந்தரவும் வராத வகையில், நன்னடத்தை பத்திரம் பெற்று, வட்டாச்சியர் மூலமாக பாதுகாப்பு ஆணையை போலீசார் வழங்கியுள்ளனர். தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 31 வயது உடைய நபரை மார்ச் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர். போலீசாரின் பரிந்துரைப்படி, கிண்டி வட்டாச்சியர் இருதரப்பிலும் விசா ரணை நடத்தினார். பின், 31வயது நபரிடம் இருந்து, சிறுமிக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என்ற பிரமாண பத்திரம் மூலமாக உத்தரவாதம் பெற்றார். இது தொடர்பாக வட்டாச்சியர் பிறப்பித்த பாதுகாப்பு ஆணை உத்தரவு, போலீசார் மூலமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட்டது. இதேபோல், 17 வயது சிறுமிக்கு தொல்லை தந்த 44 வயது நபரிடம் இருந்தும், உத்தரவாதம் பெற்று பாதுகாப்பு ஆணை வழங்கப்பட்டது. பாதுகாப்பு உத்தரவு ஆணையை மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை