உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசின் இலவச கோடைகால பயிற்சி முகாம் 25ல் துவக்கம்

அரசின் இலவச கோடைகால பயிற்சி முகாம் 25ல் துவக்கம்

சென்னை, எஸ்.டி.ஏ.டி., சார்பில், பல்வேறு விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம், இம்மாதம் 25ல் துவங்கி, 21 நாட்கள் நடக்கின்றன.இதுகுறித்து, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்ட அறிவிப்பு :எஸ்.டி.ஏ.டி., எனும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம், இம்மாதம் 25ல் துவங்கி, மே 15ம் தேதி வரை நடக்கின்றன.முகாம், 21 நாட்களும் காலை, மாலை என இரு வேலையும் நடக்கின்றன. இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு, சென்னையில் உள்ள பல்வேறு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.இதற்கு, 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமில், இறுதி நாளில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ, 74017 03480 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயிற்சி எங்கெங்கு?* நேரு பூங்காவில் தடகளம், இறகுபந்து; செனாய் நகர் மற்றும் முகப்பேரில் இறகுபந்து; கோபாலபுரம் குத்துச்சண்டை அரங்கில் குத்துசண்டைக்கும் பயிற்சி அளிக்கப்படும்* பெரிமேடு, நவீன நேரு விளையாட்டு அரங்கில் தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், கையுந்துபந்து, பளுதுாக்குதல்; நேரு உள்வினையாட்டு அரங்கில், கையுந்துபந்து, குத்துச்சண்டை, தடகளம், கால்பந்து மற்றும் கூடைப்பந்து; ஏ.ஜி.பி., அரங்கில் ஜிம்னாஸ்டிக், டைவிங், இறகுபந்து பயிற்சி நடக்கும்* எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் வளைகோல்; நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் டென்னிஸ்; புதுார் மாணவர் விடுதியில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகின்றன. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை