மேலும் செய்திகள்
கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு
03-Nov-2025
கீழ்ப்பாக்கம்: கல்லறை திருநாளை முன்னிட்டு, நேற்று கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு, நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், அவர்களது கல்லறையில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் அஞ்சலி செலுத்துவார். அதன்படி, நேற்று கல்லறை திருநாளை முன்னிட்டு, உறவுகளை நினைவு கூர்ந்த கிறிஸ்தவர்கள், காலை முதலே கல்லறை தோட்டங்களுக்கு திரண்டு வந்தனர். கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், கல்லறைகள் சுத்தப்படுத்தி, மலர்கள், மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டன. சிலர் இறந்த உறவினர்களுக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களையும் படைத்து வழிபாடு செய்தனர். பொதுமக்கள் பாதுகாப்புக்காக, 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், டி.பி. சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ கல்லறைகளிலும் கல்லறை திருநாள் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்து சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. படம் மட்டும்/கல்லறை தினம்
03-Nov-2025