உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் அத்துமீறல் காவலாளி கைது

சிறுமியிடம் அத்துமீறல் காவலாளி கைது

ஆவடி, ஆவடியைச் சேர்ந்த 11 வயது வடமாநில சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் பிரசவத்துக்காக எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் மருத்துவமனை சென்றார்.சிறுமி அவரது தங்கையுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, காவலாளியாக வேலை செய்யும் அணில் குமார், 54, என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி, ஆவடி மகளிர் போலீசார் அணில் குமாரை போக்சோவில் கைது செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி