குடிநீர் வரி செலுத்தாத தங்கும் விடுதிக்கு சீல்
வேளச்சேரி, ளச்சேரியில் 2.56 லட்சம் குடிநீர் வரி செலுத்தாத, ஆண்கள் தங்கும் விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வி.ஜி.பி. செல்வா நகரில் பெஸ்ட் என்ற பெயரில், ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி உரிமையாளர், குடிநீர் வாரியத்திற்கு, பல ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தவில்லை. 2.56 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். பலமுறை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கியும், பணம் செலுத்தவில்லை. இதையடுத்து, மாநகராட்சி மண்டல அதிகாரிகள், நேற்று, இந்த விடுதிக்கு சீல் வைத்தனர். இதேபோல், வேளச்சேரி, தரமணியில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாக, பத்துக்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. அதற்கும், சீல் வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.