உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடு குத்தகைக்கு விடுவதாக ரூ.20 லட்சம் மோசடி

 வீடு குத்தகைக்கு விடுவதாக ரூ.20 லட்சம் மோசடி

சென்னை: டி.பி., சத்திரம் பகுதியில் வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலையைச் சேர்ந்தவர் முகமது அலி, 73. இவர் கடந்த 2024ம் ஆண்டு, நண்பர் பிரேம்குமார், 37, மூலம் குத்தகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருந்தார். சாலிகிராமம், காவிரி ரங்கன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 20 லட்சம் ரூபாய்க்கு வீடு குத்தகைக்கு தருவதாக பிரேம்குமார் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய முகமது அலி, குத்தகை பணமான 20 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் வீட்டை குத்தகைக்கு விடாமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும், பிரேம்குமார் ஏமாற்றி வந்துள்ளார். பின், அவர் கொடுத்த காசோலையும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து, முகமது அலி அளித்த புகாரையடுத்து, டி.பி., சத்திரம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட பிரேம்குமாரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி