உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய கணவரிடம் விசாரணை

மனைவியை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய கணவரிடம் விசாரணை

வானகரம், மனைவியை ஆபாசமாக படம்பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் மீது புகார் அளிக்கப்பட்டது.மதுரவாயல் அடுத்த வானகரம், நுாம்பலைச் சேர்ந்தவர் ஜார்ஜ் இம்மானுவேல், 26. இவர் பெங்களூரில் உள்ள கூரியர் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.அப்போது, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த 28 வயது பெண்ணை காதலித்து, 2023ம் ஆண்டு திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின், ஜார்ஜ் இம்மானுவேல் அடிக்கடி மது குடித்து, மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், ஜார்ஜ் இம்மானுவேல் சமாதானம் பேசி, மனைவியை மீண்டும் அழைத்து வந்தார். சில தினங்களுக்கு முன், குன்னுாருக்கு இருசக்கர வாகனத்தில் இன்ப சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு விடுதியில் தங்கியிருந்த போது, ஜார்ஜ் இம்மானுவேல், தன் மனைவியை ஆபாசமாக மொபைல் போனில் படம்பிடித்துள்ளார்.பின், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால், அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.இதையடுத்து, அங்கிருந்து ஏதும் பேசாமல் வீட்டிற்கு வந்தவர், நேற்று முன்தினம் இரவு கணவரை அறையில் பூட்டி விட்டு, வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து, ஜார்ஜ் இம்மானுவேலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி