உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  15 செ.மீ., மேல் மழை பெய்தால் சில மணி நேரம் தேக்கம் இருக்கும்

 15 செ.மீ., மேல் மழை பெய்தால் சில மணி நேரம் தேக்கம் இருக்கும்

சென்னை மாநகராட்சி பகுதியில், மழைநீர் தே ங்கி ய இடங்களில் மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், 15 செ.மீ., மேல் மழை பெய்ததால், சில மணி நேரம் மழைநீர் தேங்கியது. அதுவும், மழை நின்றப்பின் சில மணி நேரங்களில் வடிந்தது. சாலையோர வண்டல் வடிதொட்டிகளில், மண், குப்பை கழிவால் அடைப்பு ஏற்படுகிறது. அவசரம் கருதி அவற்றையும் அகற்றினோம். கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு குளங்களால், அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம் ஏற்படவில்லை. அப்பகுதியில் நிலத்தடி நீ ர்மட்டமும் உயர்ந்துள்ளது. கிளை கால்வாய்களிலும் துார்வாரும் பணி சீரமைக்கப்படுவதால், வெள்ள நீர் அதிகமாக செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ