உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோயம்பேடு சந்தை இ சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

 கோயம்பேடு சந்தை இ சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

சென்னை: போக் குவரத்து நெரிசல் நிலவும் கோயம்பேடு சந்தை 'இ' சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் அமைப்பது அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கோயம்பேடு சந்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக 'இ' சாலை உள்ளது. இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு காவல் நிலையம், சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோய ம்பேடு சந்தையை ஒட்டியுள்ளதால் மலர், காய்கறி மற்றும் பழ அங்காடிகளுக்கு செல்லும் நுழைவாயில்களும் இச்சாலையில் அமைந்துள்ளன. தவிர மெட்ரோ ரயில் திட்டப்பணிகளும், மழைநீர் வடிகால்வாய் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி, நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே நெரிசலாக உள்ள இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையத்தை ஒட்டி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. அடுத்தடுத்து புதுப்புது கடைகள் அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு உணவு அருந்த வருவோர், சாலையோர ம் வாகனங்களை நிறுத்துவதால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதனால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை