நிரம்புது புழல் ஏரி உபரிநீர் திறப்பு?
சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை, ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 277 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்போது ஏரியில் 3.20 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரி நிரம்பி வருவதால், உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. முழுக்கொள்ளளவு நிரம்பியபிறகே நீர்திறக்கப்படும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.