மேலும் செய்திகள்
மீடியனில் மோதி கவிழ்ந்த ஆட்டோ: ஓட்டுநர் பலி
30-Sep-2025
சாலை விபத்தில் வாலிபர் பலி
08-Sep-2025
ஆலந்துார், அக். 7-முன்னால் சென்ற வேன் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதிய விபத்தில், படுகாயமடைந்த ஐ.டி., நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேளச்சேரி, விஜயநகர், 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் கெப்ரீ கிலாடுவின், 31; பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்துவிட்டு, ' ஹோண்டா ஷைன் ' பைக்கில், ஆதம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி, பரங்கிமலை- - வேளச்சேரி உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார். விஜயநகர் மேம்பாலம் அருகே வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற வேன் மீது மோதி, கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். விபத்தை கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலீசார், கெப்ரீ கிலாடுவினை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கெப்ரீ கிலாடுவின், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Sep-2025
08-Sep-2025