திருமணத்தை நிறுத்திய ஐ.டி., ஊழியர் கைது
ராயபுரம்,:ராயபுரம், குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 50; துணி வியாபாரி. இவருடைய மகளுக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பெண்ணிற்கு, ஒரு பெண் போன் செய்து, 'ஏற்கனவே எனக்கும் மணிகண்டனுக்கும் திருமணமாகிவிட்டது' எனக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண், பெற்றோரிடம் கூறினார். ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், மணிகண்டன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை வைத்து, போன் செய்து திருமணத்தை நிறுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.