உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‛காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியில் கண்ணதாசன் குடும்பத்தார் கவுரவிப்பு

‛காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியில் கண்ணதாசன் குடும்பத்தார் கவுரவிப்பு

மயிலாப்பூர், கவிஞர் கண்ணதாசன் புகழ்பாடும் 'காலங்களில் அவன் வசந்தம்' 100வது நிகழ்ச்சி, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில், நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியை, இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ஞானசம்பந்தம், ராமசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, புதுயுகம் பரணி, பாரதிய வித்யா பவன் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதற்கட்டமாக, கண்ணதாசன் குடும்பத்தார் கண்மணி சுப்பு, காந்தி கண்ணதாசன், ரேவதி சண்முகம் ஆகியோரை கவுரவித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை ஞானசம்பந்தம் வழங்கினார்.தொடர்ந்து, கண்ணதாசன் ரசிகர்களான காத்தாடி ராமமூர்த்தி, சாரதா, பரணி உள்ளிட்டோரும் கவுரவிக்கப்பட்டனர். இசைக்கவி ரமணன் எழுதிய, காலங்களின் அவன் வசந்தம் மற்றும் இலக்கியத்தின் கண்ணாடி ஆகிய நுால்களும் வெளியிடப்பட்டன.பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசியதாவது:காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியை, ஆறு முறையாவது நடத்த நினைத்தோம். ஆனால் நுாறாவது நிகழ்ச்சி நடக்கிறது. நமக்கெல்லாம் வழி, மொழி, விழி என காண்பித்தவர் கண்ணதாசன். அவர் குடும்பத்தார் சம்பாதித்ததை விட, கண்ணதாசனை பற்றி அதிகம் பேசுபவர்கள் தான் சம்பாதிக்கின்றனர். அதனால் நாங்கள் நிச்சயமாக, கண்ணதாசன் குடும்பத்தாருக்கு பங்கு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி