உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீன்கள் வரத்து அதிகரிப்பால் விழாக்கோலம் பூண்ட காசிமேடு

 மீன்கள் வரத்து அதிகரிப்பால் விழாக்கோலம் பூண்ட காசிமேடு

காசிமேடு: மீன்கள் வரத்து அதிகரிப்பால், காசிமேடு மீன் சந்தை நேற்று விழாக்கோலம் பூண்டது. மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி, மீன்களை வாங்கி சென்றனர். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 60க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கரை திரும்பின. மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதேநேரம், சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், காசிமேடு மீன் சந்தை விழாக்கோலம் பூண்டது. குறிப்பாக, வாளை, சங்கரா உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் குவிந்தன. வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இதனால், மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி, மீன்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை