உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குன்றத்துார், குன்றத்துாரில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கந்தழீஸ்வரர் கோவில், உபயதாரர்கள் நிதி 2.04 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கிராம தேவதை வழிபாடுகளுடன் துவங்கியது.கடந்த 5ம் தேதி யாக சாலை பூஜைகளை, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார். பின், பல்வேறு பூஜைகள் மற்றும் நான்கு கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, நேற்று காலை 9:45 மணிக்கு, சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.மாலை 6:00 மணிக்கு, நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்த விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் குன்றத்துாரை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமையில், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயகுமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ