மேலும் செய்திகள்
மது விற்பனை வாலிபர் கைது
20-Nov-2024
ஆவடி, டதிருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 57. இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஆக., 2ம் தேதி, புகார் ஒன்று அளித்திருந்தார். பொன்னேரி வட்டம், ஞாயிறு கிராமத்தில் 74 சென்ட் இடத்தை மீஞ்சூர், நல்லுார் கிராமத்தைச் சேர்ந்த பவுல்சங்கர், 53, மற்றும் அவரது குடும்பத்தினர், எனக்கு கிரையம் செய்து கொடுத்தனர்.அதை நான், என் மனைவி சுலோச்சனாவுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுத்தேன். மேலும், என் உறவினர்கள் சிலருக்கு பவுல்சங்கர், சில நிலங்களை கிரையம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் அந்த நிலங்கள் தொடர்பாக பிரச்னை எழவே, பத்திரத்தை ஆய்வு செய்ததில் குப்பன் என்பவரது நிலம் என்பது தெரிய வந்தது. அவருக்கு, 3 ஏக்கர் 12 சென்ட் நிலம் இருந்தது.அவரது மறைவுக்கு பின், அவரது வாரிசுகள், ரத்தினம், போத்தையன், சின்னதுரை, ராஜு, கோவிந்தம்மாள் ஆகியோர், தங்களுக்குள் சரிசமமாக பிரித்து அனுபவித்து வந்தனர்.இதில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்களை உருவாக்கி, பவுல்சங்கர் எங்களை ஏமாற்றி விற்றது தெரிய வந்தது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கு பதிவு செய்த நில பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி, தலைமறைவாக இருந்த பவுல் சங்கரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.
20-Nov-2024