உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமூக ஊடக செயலி மின்மினி அறிமுகம்

சமூக ஊடக செயலி மின்மினி அறிமுகம்

சென்னை, உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் 'மின்மினி' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் பயனர் ஒருவருக்கு ஒருவர் 'சாட்' செய்யலாம். தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும், மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறலாம்.மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு 'மல்டி' சேனல் நெட் ஒர்க்குகளை கொண்ட மின்மினி செயலி, 'கன்டென்ட் கிரியேட்டர்'களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.மின்மினி அறிமுக விழாவில், அதன் நிர்வாக துணை தலைவர் எஸ்.ஸ்ரீராம் பேசியதாவது:உலகளாவிய தமிழ் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் வாயிலாக, நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை, பயனாளிகள் பெறுவர். எங்கள் செயலியின் வாயிலாக நாங்கள் உருவாக்கும் இணைப்பை கருதி, மின்மினி வாயிலாக, விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ